திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியிலிருந்து துப்பாக்கி ரவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் நேற்று(23.02.2024) மீட்கப்பட்டுள்ளன
மேலதிக விசாரணை
இந்நிலையில் வயல் உரிமையாளர்களினால் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கி ரவைகளை கண்டதாகவும் உடனடியாக மொரவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் வயல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.