கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் 4,454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் திருவிழாவை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் கொண்டாடப்படும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கையர்கள் மட்டுமின்றி இந்திய பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.
திருப்பலி நிகழ்வு
நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் சிலுவை நிலையங்கள், நற்கருணை ஆராதனை, திருச்சோரூப பவனி ஆகியவை இடம்பெற்றன. வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு யாழ். பிரதிஷ்டை மாவட்ட பூசகர் ஜெபரத்தினம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இலங்கையிலிருந்து 4454 பக்தர்கள் கலந்துகொண்டனர். மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இந்திய பக்தர்கள் யாரும் வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விழாவையொட்டி பக்தர்கள் நலன் கருதி சுகாதார வசதி, போக்குவரத்து வசதி, உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்விழாவில் கடற்படை உயர் அதிகாரிகள், ஜனாதிபதியின் செயலாளர்கள், யாழ்.மாவட்ட ஆளுநர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.