அமெரிக்கா – வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக 25 வயதான அமெரிக்க விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் காசா மீதான போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும், இனப்படுகொலைக்கு துணைபோகமாட்டேன் என்று கோஷம் எழுப்பியபடி திடீரென்று தீக்குளித்துள்ளார்.
அதை சமூகவலைதளத்தில் அரோன் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வீரரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் உயிரிழந்துள்ளார்.




















