கொழும்பு தெஹிவளையில் முச்சக்கரவண்டி மீது மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் முச்சக்கரவண்டியில் மோதி இந்த விபத்து சம்பவத்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அதேவேளை இன்றுகாலை கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வெள்ளைக்கோட்டில் மோட்டார்சைக்கிளில் காத்திருந்த இளைஞரை வான் ஒன்று மோதியதில் இளைஞர் படுகாயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்திருந்ததாக கூறப்படுகின்றது.
,