இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்த சாந்தன் நேற்றுமுன் தினம் உடல்நல குறைவால் சென்னையில் உயிரிழநதார்.
பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப அவர் காத்திருந்த நிலையில் உயிரிழந்தமை ஈழதமிர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய – திராவிட கூட்டுச்சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனின் மரணத்திற்கு நீதிகோரி யாழ்ப்[பாணத்தில் ,வரும் ஞாயிற்று கிழமை (03) மாபெரும் முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு இப்போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஈழதமிழர்களையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.