இந்தியாவில் உயிரிழந்த நிலையில் சாந்தனின் உடலம் இலங்கைக்கு எடுத்துரப்பட்டுள்ள நிலையில் மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடலம்
அவர் தாயகத்திருற்கு திரும்ப கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரின் உடல் இலங்கைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் அவரது இறுதிக்கிரியைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படப்போதும் தற்போது அது நடைபெறாத நிலை காணப்படுகின்றது.