வெளிநாட்டு பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய பெண் ஒருவர் குடுவெல்ல கிராமத்திற்கு சென்றிருந்த போதே இந்த துஷ்பிரயோக சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் பிற்பகல் குடாவெல்ல பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது சந்தேக நபரான பாடசாலை மாணவன் தனது நாயுடன் வந்து இந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார்.
துஷ்பிரயோகம்
அழகிய இடத்தை காட்டுவதாக கூறி அந்த பெண்ணை கடற்கரைக்கு அருகில் உள்ள புதருக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.