சாந்தன் அண்ணாவின் இறுதிகிரியைகள் இன்று காலை இடம்பெற்று, பிற்பகலில் , அவரது எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா பதிவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் கைதாகி 32 ஆணடுகள் சிறையில் இருந்த சாந்தன் , விடுவிக்கப்படு தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல்நலகுறைவால் தமிழகத்தில் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
19 வயதில் சிறை சென்ற சாந்தன் 32 வருடங்களின் பின்னர் விடுதலையாகி இருந்தார். தன் பிள்ளையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி சாந்தனின் தாயார் இலங்கை – இந்திய அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்த நிலையில் சாந்தன் தாயகம் திரும்ப ந்திய மத்திய அசசு ஒப்புதல் அளித்திருந்தது.
எனினும் தான் பெற்ற தாயாரை காணும் பாக்க்கியம் அவருக்கு கிடைக்கவில்லை, கடைசிவரை மகனுக்காக காத்திருந்த தாய் மகனின் உடலையே காணும் அவலநிலையின் துன்பம் கூற வார்த்தைகள் இல்லை.
சாந்தனின் உடலுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற சகோதரி
சாந்தனின் பூதவுடல் அவரின் சொந்த ஊரான உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
சாந்தனின் உடலை வீட்டிற்கு கொண்டு வரும் போது அவரது உடன்பிறந்த சகோதரி ஆரத்தி எடுத்தமை அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்திருந்தது.
அதோடு அண்ணா வாறார், யாரும் அழக்கூடாது.. என் தெய்வம் வீட்டிற்கு வருகின்றது, யாரும் அழக் கூடாது அவரது சகோதரி உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தபோது8 அங்கு குழுமி இருந்தவர்கள் கண்கள் ஆறாக பெருக்கெடுத்தது.
அத்தோடு தன் மகனை உயிருடன் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த தாய் பல ஆண்டுகளுக்கு பின் உயிரற்ற உடலை கண்டு கதறி அழுதார். மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வவுனியாவில் நேற்று காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.
இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.