பிச்சைக்காரன்
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.
சசி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூலை படைத்தது. தொழிலில் வெற்றிகரமாக இருக்கும் விஜய் ஆண்டனி அம்மா தனது கம்பெனியில் நடந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்த செய்தி கேட்டு அவரது மகன் விஜய் ஆண்டனி தாயை காண வந்தபோது தான் ஒருவர் 40 நாட்க்ள் பிச்சை எடுத்து கோவில் உண்டியலில் போட்டால் அம்மாவின் உடல்நிலை சரியாகும் என்கின்றார்.
அதன்பிறகு அவர் 40 நாட்கள் பிச்சை எடுத்தாரா, தாயை காப்பாற்றினாரா என்பது கதை.
பாக்ஸ் ஆபிஸ்
படத்தின் எமோஷ்னல் கதைக்களத்தில் மிகவும் மூழ்கிய ரசிகர்கள் படத்திற்கு அமோக வெற்றியை தேடிக் கொடுத்தனர்.
தமிழில் படம் மாஸ் வெற்றியடைய தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.
குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் மொத்தமாக ரூ. 42.25 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.