மன்னாரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டிலான் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைதினம் (04.03.2024) மாலை 6 மணியளவில் அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மன்னார் – அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை டிலான் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மறைமாவட்ட அருட்தந்தை டிலான் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலதிக சிகிசிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.