பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) சபைக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு
இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து சபாநாயகர் இந்த உத்தரவை சபைக்கு அறிவித்தார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.