கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இரு சுற்றுலா பயணிகளை ரயில் நிலைய பணியாளர்கள் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான சுற்றுலா பயணிகள் இருவரும் 2 ஆம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை வைத்திருந்துள்ளனர்.
எனினும் அவர்கள் 1ஆம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நாவலப்பிட்டி ரயில் நிலைய ஊழியர்கள் இந்த இரு சுற்றுலா பயணிகளையும் தாக்கி அவர்களை ரயிலில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.