கணவரை பிரிந்து விட்டதாக சொல்லப்படும் சர்ச்சைக்கு பதில் கூறும் விதமாக நடிகை பிரியங்கா நல்காரி இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா நல்காரி
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் நடித்து புகழ் பெற்றவர் தான் பிரியங்கா நல்காரி. சமீபத்தில் திருமணமாகி ஒரே ஆண்டில் அவர் தனிமையில் இருப்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவரின் உறவு நிலை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள ஆர்வத்தில் ஆழ்த்தியது.
இவர் ரோஜா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பின்னர் இவர் “சீதா ராமன்’ சீரியலில் நடித்து திடீர் என்று அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.
இதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் உள்ள கோவில் ஒன்றில் இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதை அவர் தனது இன்டாகிராம் பக்கதில் வெளியிட்டு இருந்தார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் பிரியங்கா உரையாடி கொண்டு இருந்த போது அவர் தனது உறவு நிலை பற்றிய கேள்விக்கு விடையளித்து இருந்தார்.
இவர் தனது சமூக வலைத்தளத்தில் கவலையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் “போனதை பத்தி யோசிக்காதீங்க. போனது போனது தான். அதை பற்றி நினைக்காதீங்க.
அடுத்து என்னனு யோசிங்க. Present தான் முக்கியம். அதை மட்டும் என்ஜாய் பண்ணுங்க” எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரகின்றது.