1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு மிகுதியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06.03.2024) விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.