பிரான்ஸ் துளூஸ் (toulouse) நகருக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ரயில் பாலம் தகர்ந்து வீழ்ந்ததில் பாரிஸ் புறநகரில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (4) நேர்ந்த இந்த விபத்தில் 55 வயதுடைய என்ற மூன்று பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தார் என்பதைப் பாரிஸ் தமிழர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
பொண்டியில் வசித்து வந்தவர் உயிரிழப்பு
உயிரிழந்தவர் பாரிஸின் புற நகராகிய பொண்டியில் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது. மெற்றோ ரயில் வழித்தட விஸ்தரிப்புக்காக Labège என்ற இடத்தில் நிறுவப்பட்டு வந்த கொங்கிறீட் பாலத்தின் தளப் பகுதி திடீரென வீழ்ந்ததில் இந்த நர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த குடும்பஸ்தருடன் நான்கு பேர் சிக்குண்டதாக கூறப்படுகின்றது. விபத்து நேர்ந்த சமயம் பணியாளர்கள் நால்வரும் பாலத்தின் தளப் பகுதி மீது நின்றிருந்தனர் என்று கூறப்படுகிறது.
பாலம் தகர்ந்த சமயத்தில் அவர்கள் பத்து மீற்றர்கள் உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சமபவ்த்தின் ஆரம்ப கட்ட விசாரணைகள் பாரம் தூக்கி ஒன்றின் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பே (breakage of a jack) இந்த அனர்த்தத்துக்குக் காரணம் என கூறப்படுவதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.