2035ம் ஆண்டுக்குள் நிலவின் மேற்பரப்பில் அணுமின் நிலையம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனத்தின் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.
சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாக யூரி போரிசோவ் கூறினார்.
விண்வெளி நிலையத்தை அமைக்கும் காலகட்டம்
2033 முதல் 2035 வரையிலான காலகட்டத்தில் இந்த திட்டத்தை முடிக்க நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அணுசக்தியால் இயங்கும் சரக்கு விண்கலத்தை உருவாக்க ரஷ்யாவும் நம்புகிறது என்று ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் கூறினார்.
இந்த இரண்டு திட்டங்களையும் வெற்றிகரமாக முடிக்க முடிந்தால், நிலவில் குடியேற்றம் ஏற்படுத்த பெரும் உதவியாக இருக்கும் என்று யூரி போரிசோவ் மேலும் தெரிவித்தார்.