யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று (07) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு பிறந்த இவர் , தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார்.

உயிரிழந்த முதியவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். அதேவேளை இலங்கையை ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.