கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆக காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுட்டெண் மேலும் மோசமடைந்தால், கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொழும்பை தவிர அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வளி மாசு நிலைமை மோசமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.