நடிகை நயன்தாரா தனது கணவர் விக்கியுடன் எடுத்துள்ள ரொமான்ஸ் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
இந்த தம்பதிகள்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். அவ்வப்போது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர்.
நயன்தாரா தனது கணவருடன் தற்போது வெளிநாட்டில் நேரத்தை செலவழித்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகின்றனர்.
கணவருடன் ரொமான்ஸ்
நயன்தாரா தற்போது புகைப்படத்தின் மூலம் இருவரின் விவாகரத்து சர்ச்சைக்கும் ஒரு முடிவு கிடைத்துள்ளது.
இவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் முத்த மழையில் நயன்தாரா மகிழ்ச்சியாக இருக்கின்றார்.
சமீப காலமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் மாறி மாறி நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் காதலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.