பலாங்கொடையில் சாரதியின்றி பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் வீட்டின் மீது குறித்த லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் பலாங்கொடை – மிரிஸ்ஸாவத்தை வீதியில் சாரதியின்றி பயணித்த லொறி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறி விபத்து
விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி திடீரென இயங்கிய நிலையில் கீழ் நோக்கி பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.