உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும் போது சீருடை அணிந்து மசாஜ் நிலையத்தின் சேவைகளைப் பெறச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தொடர்பில் விசாரணை ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட் யக்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு சீருடையை பொலிஸ் காவலில் எடுத்து வாக்குமூலங்கள் பெற்று வெளியிடப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
சேவை பெறசென்ற பொலிஸ்
தொம்பே பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
சார்ஜன்ட் உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவிருந்த ஆவணங்களை முன்வைப்பதற்காக தொம்பே காவல்துறையின் மற்றுமொரு அதிகாரி யக்கல பொலிஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி வீதியிலுள்ள மசாஜ் நிலையமொன்றில் பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் சேவையைப் பெற வந்துள்ளதாக யக்கல பொலிஸ் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் யக்கல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பொலிஸ் சார்ஜன்ட், விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது