அழுகை மனதை அமைதிப்படுத்தும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் வெளிப்படையாக அழுவது மன அமைதியைத் தரும். அழுவது உங்களை நன்றாக உணர வைக்கின்றது.
உங்களுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் சத்தமாக அழுங்கள். எல்லோரும் பார்க்கிறார்கள் என்று நினைத்தால் யாரும் இல்லாத இடத்திற்கு சென்று அழுகுங்கள்.
அழுகை வலியைக் குறைக்கிறது என்பதை பல சமயங்களில் காணலாம். நீங்கள் காயப்பட்டாலோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளானாலோ அழுவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.
அழுகை உங்கள் மன அழுத்தத்தை போக்க நல்ல மருந்து உங்களிடம் உள்ள அனைத்த வலிகளும் கண்ணீரின் வடிவில் மறைந்துவிடும் இப்போது நீங்கள் முன்பை விட சற்று சுதந்திரமாக இருப்பீர்கள் அதே வலியை உங்களுக்குள் வைத்திருந்தால், அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
அழுகை மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் பிற இரசாயனங்கள் குறைக்கிறது.கண்ணீர் மன அழுத்தத்தை குறைக்கிறது. இரசாயனங்கள் கண்ணீர் வழியே பாய்கின்றன.
இது மன அழுத்தத்தை குறைக்கிறது. அதனால்தான் அழுவது மோசமானது என்று நீங்கள் நினைப்பது தவறு கண்டிப்பாக உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரட்டும் அப்போதுதான் உங்கள் மனம் அமைதியாக வேலை செய்யும்.