போதைப்பொருள் கடத்தல் பணத்தில் பெறப்பட்ட 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான இரு வீடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவினரால் கையகப்படுத்தியுள்ளது.
கிரிபத்கொட மற்றும் வத்தளை பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடுகளே இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன.
10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி
குறித்த வீடுகள் நாட்டின் முன்னணி போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது.
இதேவேளை, கடவத்தை – கரகஹமுன பிரதேசத்தில் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியில் கட்டப்பட்ட மூன்று மாடி சொகுசு வீடு ஒன்றும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசம்யம் குறித்த வீட்டின், உரிமையாளர் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.