ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட மயக்க மருந்து நிபுணராக பணிபுரியும் பெண் வைத்தியர் திடீரென எவ்வித அறிவிப்பையும் வழங்காது வெளிநாடு சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பில் அவர் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு வட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையின் பணிப்பாளர் இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.
எனினும் குறித்த பெண் மருத்துவர் எதற்காக நாட்டைவிட்டு வெளியேறினார் என்பதற்கான காரணம் வெளியாகவில்லை.