ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இளைஞனின் மரணம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மரணத்திற்கான காரணம்
கடந்த 6 ஆம் திகதி கடுவலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிறைச்சாலையில் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.