யாழில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று இன்று (18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதியாக செயற்பட்ட வீட்டில் தங்கியிருந்த 2 யுவதிகளும், 3 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
500 ரூபா முதல் 10000 வரை கட்டணம்
சுழிபுரம், சங்கானை, கிளிநொச்சி பகுதிகளிலிருந்து யுவதிகள் அங்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது .
இதன்போது ரூ.500 தொடக்கம் ரூ.10000 வரை கட்டணம் அறவிடும் யுவதிகள் அங்கு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்துள்ளனர்.
அதோடு அந்த வீட்டுக்கு வந்து, யுவதிகளை தெரிவு செய்து அழைத்துக் கொண்டு சென்று, யாழ் நகர விடுதிகளில் உல்லாசமாக இருக்கும் சேவையும் வழங்கப்பட்டு வந்துள்ளது
. நாளாந்தம் 20 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அங்கு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று பொலிசார் சுற்றிவளைத்து அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.