ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதியினால் பசில் ராஜபக்சவிற்கு, இந்த சந்திப்பிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பிலும் ஏனைய அரசியல் விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து இந்த சந்திப்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது சாதகமான நிலையை ஏற்படுத்தும் என மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.