இந்தியாவில் மகனொருவர் தனது சொந்த தோலில் இருந்து செய்யப்பட்ட காலணிகளை தனது தாய்க்கு பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
எனினும் அந்த மகன் ஒரு ரவுடி என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்தவர் ரவுனக் குர்ஜார். ரவுனக் குர்ஜார் ஒரு முறை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர் ஆவார்.
ரவுடியை ஈர்த்த இராமாயணம்
அப்போது அவரது தொடைப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில், அதில் தோல் அகற்றப்பட்டது. அந்த தோலை செருப்பு தொழிலாளியிடம் கொடுத்து காலணியாக தைக்குமாறு ரவுனக் குர்ஜார் கூறி உள்ளார்.
அதன்படி அந்த தொழிலாளி அவரது தோலை காலணியாக வடிவமைத்து கொடுக்க, அதனை அவர் தாய்க்கு பரிசாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
நான் ராமாயணத்தை தவறாமல் பாராயணம் செய்வேன். ராமரின் கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். தாயாருக்கு தன் தோலினால் செருப்பை செய்தாலும் போதாது என்று ராமரே கூறி உள்ளார்.
எனவே இந்த யோசனை என் மனதில் தோன்றியது. அதன்படி எனது தோலில் இருந்து காலணிகளை உருவாக்கி என் அம்மாவுக்கு பரிசளிக்க முடிவு செய்தேன். சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.
இந்நிலையில் தனது தாய்க்கு தன் தோலில் மகன் பாதணி செய்து கொடுத்த சம்பவம் சமூகவலைத்தள வாசிகளை திகைக்க வைத்துள்ளது.