தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் சொத்துக்களை அபகரித்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் சொத்துக்களை அபகரித்த மோசடிக்காரர்களை கைது செய்ய தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தான் ஜனாதிபதியானால் அனைத்து திருடர்களையும் நேரில் சென்று கைது செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.