‘அருணாசல பிரதேசம் என்றழைக்கப்படும் ‘ஷாங்னான்’ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு மீண்டும் கூறியுள்ளது.
‘அருணாசல பிரதேசத்தை சீனா தொடா்ந்து உரிமை கொணடாடி வருவது அபத்தமானது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்தக் கருத்தை சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது:
சீனாவின் அதிகாரபூா்வ பெயா்
இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதி இதுவரை வரையறுக்கப்படவில்லை. அருணாசல பிரதேசத்துக்கு ‘ஷாங்னான்’ என்பதுதான் சீனாவின் அதிகாரபூா்வ பெயா்.
இந்தப் பகுதி இந்தியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்புவரை, சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
சீனாவின் இந்த நிலைப்பாட்டில்
எனவே, இந்தப் பிராந்தியத்தை திறம்பட நிா்வகிக்கும் உரிமை சீனாவுக்கு எப்போதும் உள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்த இந்தப் பிராந்தியத்தை அருணாசல பிரதேசமாக கடந்த 1987-இல் தான் இந்தியா நிறுவியது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீனா தொடா்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. சீனாவின் இந்த நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமிருக்காது என்றாா்.