அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் நீரில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன.
அதேவேளை இலங்கைக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியுடன் காணப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று அமெரிக்காவின் நீண்ட பாலமான மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பல் மோதியதில் பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பலவாகனங்களும் ஆற்றில் விழுந்துள்ளதுடன் 20 இற்கும் அதிகமானவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.