நீர்கொழும்பில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதிகளில் பணிபுரிந்த இரு பெண்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து நீர்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும் மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய 137 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.