அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு
இந்த வரி குறைப்பு நேற்று (27) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை நடைமுறையில் காணப்படும்.
இதேவேளை பெரிய வெங்காயத்தின் (இளஞ்சிவப்பு வெங்காயம்) இறக்குமதிக்கான வரி ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை, கிலோ கிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.