குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் 88 வயதான கணவனின் மரணத்தைத் தாங்க முடியாமல் விஷம் அருந்திய 85 வயது மனைவி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டு பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர்.
பிரதேச பரிசோதனையில் கணவர் இதயம் செயலிழந்து உயிரிழந்துள்ளதாகவும் மனைவி விஷமருந்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மனைவியின் முடிவு
நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தம்பதியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் தங்கள் மகன், மருமகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுடன் தங்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவன்-மனைவியாக மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கணவன் சுகயீனமடைந்து இருந்து காலப்பகுதியில், அவர் இறந்தால் தானும் வாழ மாட்டேன் என அவரது மனைவி பல சந்தர்ப்பங்களில் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆதார வைத்தியசாலை
மகன் மற்றும் மருமகள் இருவரும் வியாபார விடயமாக அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், பேத்தி காலை தேநீருடன் அறைக்கு சென்றபோது, பாட்டி கட்டிலில் முனகுவதை பார்த்ததாகவும் தாத்தா படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உறவினர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் பாட்டியை தாயை உடனடியாக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு பேத்தி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது மேலும் தெரியவந்துள்ளது.