யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவமானது நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் எதிர்பாராத நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனினும் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.