யாழ்ப்பாணம், புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் , 22 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைக்குள்ளும் மோதல்போக்கு
இதன் காரணமாக , வைத்தியர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் , அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் , வைத்தியசாலையினுள்ளும் மோதல் போக்குடன் காணப்பட்டதாகவும், அவர்கள் , மோதலில் ஈடுபடவும் முயன்றுள்ளார்கள் என தெரியவந்துள்ளது .
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.