புத்தளம் கல்லடி பகுதியில் மானிறைச்சியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, மானை வேட்டையாடி இறைச்சியை வெட்டிக் கொண்டிருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் 15 கிலோ கிராம் இறைச்சி, மான் தலை, மான்தோல், தராசு மற்றும் கத்திகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதவான் உத்தரவு
அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்லடி பகுதியைச் சேர்ந்தவரென வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது, பதில் நீதவானாக கடமையாற்றிய மொஹமட் இக்பால், கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவு பிறப்பித்ததுடன் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.