இந்துகளின் சமய வழிப்பாடுகளில் கற்பூரத்திற்கு ஓர் தகுந்த இடம் கண்டிப்பாக இருக்கிறது. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது. இது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு அழகிற்கும் நன்மையை அள்ளித் தருகிறது.
இந்த கற்பூரமானது கற்பூர மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆசியாவில், குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா மற்றும் போர்னியோவில் காணப்படுகிறது.
இந்த கற்பூரத்தை எரிக்கும் போது அதில் இருந்து வரும் தீயானது எதிர்மறை ஆற்றலை வீட்டில் இருந்து விரட்டியடிக்கும். அந்தவகையில் வீட்டில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளுக்கு அதாவது கடன் தொல்லை நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகளில் இருந்து நீங்கள் வெளியேறுவதற்கு கற்பூரத்தை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
கற்பூர வாசனைக்கு நோய் தீர்க்கும் சக்தி உண்டு. வேறொருவர் நீங்கள் குடியேற நினைத்தால் முதலில் அந்த வீட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
குடும்பத்தில் உறவுகளின் வலிமை அதிகரிக்க வேண்டுமென்றால் கற்பூரம் கொளுத்துவதால் மனம் தூய்மை அடையும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சந்தோஷமாக வாழலாம்.
படுக்கையறையில் வெள்ளி அல்லது பித்தளை கிண்ணத்தில் கற்பூரம் ஏற்றி வைக்கலாம். அல்லது அறையின் மூளையில் கற்பூரத்தை வைக்கலாம். அது கரைவது போன்று தெரிந்தால் உடனே மாற்ற வேண்டும்.
மாலை நேரத்தில் உங்கள் வீட்டின் தென்கிழக்கில் கற்பூரம் ஏற்றுவது செழிப்பை தரும். ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும் நெய்யுடன் கற்பூரத்தை ஏற்றி வைக்கலாம்.
வாஸ்து விதிகளின்படி வீட்டை கட்டவில்லை என்றால் வாஸ்து பொருந்தாத இடங்களில் கற்பூரத்தை வைத்து வருவதன் மூலம் வாஸ்து தோஷத்தை நீக்கலாம். நீங்கள் சம்பாதிக்கும் பணமானது சீக்கிரமாக செலவாகி விடுகிறதா? அல்லது திடீரென்று செலவுகள் அதிகரிக்கிறதா? அப்படியென்றால் சிவப்பு ரோஜா பூவில் கற்பூரத்தை வைத்து கற்பூரத்தை எரித்து அந்த மலரை துர்கா தேவிக்கு அர்ச்சனை செய்யலாம். இதன் மூலம் வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கலாம்.