இலங்கையின் சுகாதாரத் துறையின் தாதியர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான உத்தியோகபூர்வ ஆடைக் கொடுப்பனவான 15,000 ரூபா 10,000 ரூபா அதிகரிக்கப்பட்டு 25,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
பற் சிகிச்சையாளர் கொடுப்பனவு
இதேவேளை இந்த வருடத்திற்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை மே மாதத்திலும் அடுத்த வருடத்திற்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை அதே வருடம் மார்ச் மாதத்திலும் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலேரியா கட்டுப்பாட்டு உதவியாளர், பொது சுகாதார கள அலுவலர், பூச்சியியல் உதவியாளர், பற் சிகிச்சையாளர் பணியிடங்களுக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 10,300 ரூபா முதல் 17,000 ரூபா வரை 6,700 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
கால்நடை தடுப்பூசி போடுபவர்கள்
அத்துடன் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 14,000 ரூபா உதவித்தொகை 9,000 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 23,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கால்நடை தடுப்பூசி போடுபவர்கள் மற்றும் இளநிலை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 9,300 ரூபா உதவித்தொகை 5,700 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.