Vivo நிறுவனம் புதிதாக உருவாக்கும் ஸ்மார்ட்போனில் ட்ரோன் கமெரா செட்டப் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vivo நிறுவனம்
கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணியில் Vivo நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில, இந்த சாதனத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பமும் செய்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் ட்ரோன் கமெரா ஆக்டிவேட் செய்ததும், போனிலிருந்து பிரிந்து காற்றில் மிதக்க துவங்கிவிடும் என்றும் பயனர்கள் எவ்வளவு தூரம் பறக்க வேண்டும்… எந்த கோணத்திலிருந்து படம்பிடிக்க வேண்டும் என்பதை செயலி மூலம் கட்டுப்படுத்தவும் முடியுமாம்.
ஆனால் இவை பயன்பாட்டிற்காக எப்போது விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், ஆனால் இந்த சாதனம் வந்த பின்பு ஸ்மார்ட் போன் மூலம் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கும் முறை முற்றிலுமாக மாறிவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இதனால் அதிநவீன கமெரா சென்சார்கள் வழங்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், இதன் பேட்டரி அளவு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஸ்மார்ட் போன் துறையில் முற்றிலும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ள Vivo நிறுவனம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
ஆனாலும் பேட்டரியின் திறன் தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களை விட குறைவாகவே இருக்கும் என்றும், ட்ரோன் கமெராவை இயக்கும் போது சார்ஜ் வேகமாக குறைந்துவிடும் என்று கூறப்படுகின்றது.