யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத் திருடி சென்றவரைப் பொலிஸார் கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நபரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு , மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய வேளை தனது முச்சக்கர வண்டி களவாடப்பட்டதை அறிந்து அது தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் குறித்த முச்சக்கர வண்டி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் பயணித்த போது , அதனை அடையாளம் கண்டுளார்.
முசாக்கரை வண்டியை வழிமறித்தபோது அந்நபர் முச்சக்கர வண்டியை கைவிட்டு விட்டு , தப்பியோடி , வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு அதில் தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.