இந்தியாவின் பெங்களூருவில் புகழ் பெற்ற மதுராம்மா கோயிலின் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரானது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராம்மா ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றுள்ள நிலையில் தேர் எதிர்பாராத விதமாக சரிந்து விபத்துக்குள்ளானது.
கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் தப்பி ஓடியதால் எந்தவித உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.