வவுனியா சிவபுரம் பகுதியில் கப்ரக வாகனம் இரு துவிச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
மன்னார் வீதியூடாக பயணித்த கப்ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் பம்பைமடு பகுதியிலிருந்து நெளுக்குளம் நோக்கி வீதியோரமாக பயணித்த இரு துவிச்சக்கரவண்டி மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது
இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



















