ரவீந்தர்
பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயத்தால் மிகவும் பிரபலமானார்.
முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டார்.
எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் திடீரென திருமண புகைப்படங்களை இந்த ஜோடி வெளியிட ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆனார்கள். அதன்பிறகு இவர்கள் மிகவும் பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டார்கள்.
சந்தோஷமாக இவர்கள் வாழ்ந்து வந்த நேரத்தில் தான் ரவீந்தர் மீது ஒருவர் பண மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனால் கைதான ரவீந்தர் பல போராட்டங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பிறகு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
வைரல் பதிவு
இந்த நிலையில் ரவீந்தர் தனது இன்ஸ்டாவில் என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்று பதிவு செய்து தனது பழைய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ஒரு ரசிகர் விவாகரத்து ஆனதா என கேட்க அதற்கு ரவீந்தர், எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது நடக்காது, அது சாத்தியமற்றது என பதில் பதிவு போட்டுள்ளார்.
View this post on Instagram