இலங்கையில் விமானப் படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது 27000 விமானப் படையினர் கடமையாற்றி வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 18000 மாக குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு படையினரின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையானது கட்டம் கட்டமாக எதிர்வரும் 2030ம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட உள்ளது.
தொழில்நுட்ப ரீதியில் தகுதியுடைய எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கக்கூடிய படைப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என விமானப் படை அறிவித்துள்ளது.
விமானப் படைவீரர் ஒருவரினால் ஆற்றக்கூடிய சில கடமைகளை ட்ரோன்களைக்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என விமானப்படைகளின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மர்ஷல் சம்பத் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
சமனிலையான அடிப்படையில் படைவீரர்கள் எண்ணிக்கை பேணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 29ம் திகதி முதல் ஜூன் மாதம் 2ம் திகதி வரையில் விமானப்படையின் விசேட கண்காட்சியொன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.