முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியில், 30 வயதான நபரொருவர் 18 வயதான மாணவியை கர்ப்பமாக்கிய பின்னர் மலேசியாவுக்கு தப்பியோடியுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பை சேர்ந்தவர் என தெரியவருகின்றது
நீண்டகாலம் மலேசியாவில் தங்கியிருந்து தொழில் பார்த்து வந்த சந்தேக நபர், கடந்த வருட நடுப்பகுதியில் வவுனியாவிற்கு வந்து அங்குள்ள விடுதி ஒன்றில் சில நாட்கள் தங்கியிருந்ததாகத் தெரியவருகின்றது.
இவ்வாறு தங்கியிருந்த போது தன்னை சுவிஸிலிருந்து சுற்றுலாவுக்காக இலங்கை வந்ததாக தெரிவி்த்துள்ளார்.
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்கு வந்திருந்த முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியைச் சேர்ந்த 39 வயதான குடும்பப் பெண் மற்றும் அந்தப் பெண்ணி்ன் கணவர், 17 வயதான மகள் மற்றும் 15 வயதான மகன் ஆகியோரும், வவுனியாவில் சந்தேக நபர் தங்கியிருந்த விடுதியில் ஒரு நாள் தங்கியிருந்துள்ளனர்.
அதன் போது சந்தேக நபருக்கும் குறித்த குடும்பத்திற்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த குடும்பப் பெண் பல தடவைகள் கடவுச்சீட்டு அலுவல்களுக்காக வவுனியாவுக்கு தனியே வந்து சென்றுள்ளார்.
இதன் போது சந்தேக நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் உடல்ரீதியான தொடர்புகள் பேணப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பெண்ணுக்கும் தான் சுவிஸ் என கூறி மகளை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
இதனையடுத்து பலதடவைகள் மல்லாவிக்கு குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கணவன் தனது மனைவியை தாக்கியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் மனைவி காயமடைந்து வைத்தியசாலையி்ல அனுமதிக்கப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று கணவன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் கணவர் தனது குடும்பத்தை பிரிந்து தனது பிறந்த இடமான ஜெயபுரத்தில் வசித்து வந்துள்ளார்.
இதன் பின்னர் சந்தேக நபரின் தாயும், மகளும் பல தடவைகள் வவுனியா மற்றும் கொழும்புக்கு சென்று வந்துள்ளார்கள். தனது மகனை தனது உறவினர்களுடன் விட்டுவிட்டே இருவரும் சந்தேக நபருடன் சென்றுள்ளார்கள்.
இந்த நிலையில் குடும்பப் பெண்ணின் மகள் 2 மாத கர்ப்பிணி என கடந்த பெப்ரவரி மாதம் மருத்துவப்பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் இது தொடர்பாக சந்தேக நபருக்க்கு தாயார் தெரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் சந்தேக நபர் வவுனியா பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதேவேளை சந்தேக நபரின் தொலைபேசியும் செயலிழந்துள்ளது. இந் நிலையில் தனது காதலனைக் காணவில்லை என வவுனியா பொலிஸாரிடம் மகள் முறையிட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேக நபர் மலேசியாவில் வேலை வாய்ப்பு பெற்ற ஒருவர் என்பதும் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதும் அறியப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் மலேசியாவுக்கு மீண்டும் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் அறிந்துள்ளார்கள். தற்போது குடும்பப் பெண்ணின் மகள் சந்தேக நபரால கர்ப்பமாக்கப்பட்டு 5 மாத கர்ப்பிணியாக நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான குகநேசன் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி உறவு கொண்டதுடன் அவர்களிடமிருந்து பணம், நகைகளைப் பெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு மற்றும் வவுனியா போன்ற இடங்களில் முறைப்பாடுகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
சந்தேக நபரின் வாட்ஸ்அப் இலக்கத்தில் இருந்த புகைப்படத்தை தவிர சமூகவலைத்தளங்களில் தொடர்புகள் பேணாது இருந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
எனினும் அவனது புகைப்படங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என குடும்பப் பெண் மற்றும் மகள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்கள்.