எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் மீது இவ்வாறு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த தாக்குதலின் போது குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரது வீட்டின் மீது அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தப்பிச் சென்ற சம்பவமொன்றும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் கைவாறு முத்துவா என்ற பாதாள உலகக் குழு தலைவர் செயற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.