நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இரண்டு தினங்களுக்கு மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலை
அந்தவகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (12.4.2024) மற்றும் நாளை (13.4.2024) மூடப்படவுள்ளன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மதுபானசாலைகள் நேற்று (11) இரவு 10 மணி வரை திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.