பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கவனயீனமாக வாகனம் செலுத்துதல் மற்றும் குடிபோதையில் வாகனம் செலுத்துதல் போன்றவற்றினால் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வேகமாக வாகனம் செலுத்துதல், கவனயீனமாக வாகனம் செலுத்துதல் மற்றும் மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் ரோந்துப் பணி
குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு விசேட பிரிவுகள் நாடு முழுவதிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் முதல் மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.