பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருக்கும் போது எல்லை மீறி பலத்தை பயன்படுத்தினால், அதனை அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலினால் இளைஞன் ஒருவரின் விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஹொரணை – ஒலபொடுவ ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில் “அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருக்கும் போது எல்லை மீறி பலத்தை பயன்படுத்தினால், அதனை அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், சட்டவிரோத போதைப்பொருள், மதுபானம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட முந்தைய பல குற்றங்களுடன் தொடர்பு கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.” என தெரிவித்துள்ளார்.